×
الأعرافவசனம் 155

அல்-முக்தஸர்

وَٱخْتَارَ مُوسَىٰ قَوْمَهُۥ سَبْعِينَ رَجُلًا لِّمِيقَـٰتِنَا ۖ فَلَمَّآ أَخَذَتْهُمُ ٱلرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ أَهْلَكْتَهُم مِّن قَبْلُ وَإِيَّـٰىَ ۖ أَتُهْلِكُنَا بِمَا فَعَلَ ٱلسُّفَهَآءُ مِنَّآ ۖ إِنْ هِىَ إِلَّا فِتْنَتُكَ تُضِلُّ بِهَا مَن تَشَآءُ وَتَهْدِى مَن تَشَآءُ ۖ أَنتَ وَلِيُّنَا فَٱغْفِرْ لَنَا وَٱرْحَمْنَا ۖ وَأَنتَ خَيْرُ ٱلْغَـٰفِرِينَ ﴿١٥٥﴾

தம் சமூகத்தின் மூடர்கள் காளைக் கன்றை வணங்கியதற்கு தங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதற்காக மூஸா அவர்களிலிருந்து சிறந்த எழுபது நபர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டார். அவர்கள் வருவதற்காக அல்லாஹ் ஒரு நேரத்தையும் நிர்ணயம் செய்தான். அவர்கள் வந்த போது அல்லாஹ்விடமே துணிந்து அல்லாஹ்வைக் கண்முன்னால் காட்டுமாறு மூஸாவிடம் வேண்டினார்கள். அதன் காரணமாக பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதன் பயங்கரத்தால் மயங்கி விழுந்தார்கள். செத்துமடிந்தார்கள். மூஸா தம் இறைவனிடம் மன்றாடினார்: “என் இறைவா, அவர்களையும் அவர்களுடன் என்னையும் நீ அழிக்க நாடியிருந்தால் அவர்கள் இங்கு வருவதற்கு முன்னரே அழித்திருப்பாய். எங்களில் மூடர்கள் செய்த காரியத்திற்காகவா எங்களை அழித்தாய். என் சமூகம் காளைக் கன்றை வணங்கியது ஒரு சோதனையே. அதன் மூலம் நீ நாடியவர்களை வழிதவறச் செய்கிறாய். நீ நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுகின்றாய். எங்களின் விவகாரங்களுக்கு நீயே பொறுப்பாளன். எனவே எங்களின் பாவங்களை மன்னித்துவிடுவாயாக. விசாலமான உனது கருணையின் மூலம் எங்கள் மீது கருணை காட்டுவாயாக. நீயே பாவத்தை மன்னப்போரில் மிகச் சிறந்தவன்.”