×
الأعرافவசனம் 156

அல்-முக்தஸர்

وَٱكْتُبْ لَنَا فِى هَـٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةً وَفِى ٱلْـَٔاخِرَةِ إِنَّا هُدْنَآ إِلَيْكَ ۚ قَالَ عَذَابِىٓ أُصِيبُ بِهِۦ مَنْ أَشَآءُ ۖ وَرَحْمَتِى وَسِعَتْ كُلَّ شَىْءٍ ۚ فَسَأَكْتُبُهَا لِلَّذِينَ يَتَّقُونَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلَّذِينَ هُم بِـَٔايَـٰتِنَا يُؤْمِنُونَ ﴿١٥٦﴾

நீ இந்த உலக வாழ்வில் அருட்கொடையையும் ஆரோக்கியத்தையும் வழங்கி, நற்செயல்கள் புரிவதற்கு பாக்கியம் அளித்து கண்ணியப்படுத்தியவர்களில் எங்களையும் ஆக்குவாயாக. மறுமையில் நீ சொர்க்கத்தை தயார்படுத்தி வைத்துள்ள நல்லடியார்களுடனும் எங்களை ஆக்குவாயாக. நாங்கள் எங்களின் தவறுகளை ஒத்துக்கொண்டு உன்பக்கம் திரும்பி விட்டோம். அதற்கு அல்லாஹ் கூறினான்: “துன்பத்துக்குரிய காரணிகளைச் செய்தவர்களில் நான் நாடியோரை என்னுடைய வேதனையினால் பிடிப்பேன். என் அருளோ இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும் விட விசாலமானது. அல்லாஹ்வின் அருளும் கருணையும் உபகாரமும் படைப்புகள் அனைத்தையும் சூழ்ந்துள்ளது. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்கு மறுமையில் என் அருளை எழுதி விடுவேன். அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து ஸகாத்தை உரியவர்களுக்கு வழங்குகிறார்கள். நம் வசனங்களின் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.