×
الأعرافவசனம் 157

அல்-முக்தஸர்

ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلرَّسُولَ ٱلنَّبِىَّ ٱلْأُمِّىَّ ٱلَّذِى يَجِدُونَهُۥ مَكْتُوبًا عِندَهُمْ فِى ٱلتَّوْرَىٰةِ وَٱلْإِنجِيلِ يَأْمُرُهُم بِٱلْمَعْرُوفِ وَيَنْهَىٰهُمْ عَنِ ٱلْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَـٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ ٱلْخَبَـٰٓئِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَٱلْأَغْلَـٰلَ ٱلَّتِى كَانَتْ عَلَيْهِمْ ۚ فَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِهِۦ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَٱتَّبَعُوا۟ ٱلنُّورَ ٱلَّذِىٓ أُنزِلَ مَعَهُۥٓ ۙ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ ﴿١٥٧﴾

அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறார்கள். அவர் எழுதவோ படிக்கவோ தெரியாத உம்மீ நபியாவார். அவரது இறைவன் அவருக்கு வஹி அறிவிக்கிறான். அவர்கள் அவருடைய பெயர், பண்புகள், அவருக்கு இறக்கப்பட்ட வேதம் ஆகியவற்றைப் பற்றி, மூஸாவுக்கு இறக்கப்பட்ட தவ்ராத்திலும், ஈஸாவுக்கு இறக்கப்பட்ட இன்ஜீலிலும் எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறார்கள். நல்லவற்றை அவர்களுக்கு ஏவுவதோடு, இயல்புக்கு முரணான, ஆரோக்கியமான அறிவுக்கு எதிரான தீய விஷயங்களை விட்டும் தடுக்கின்றார். தீங்குகளற்ற சுவையான உணவுப் பொருட்கள், குடிபானங்கள், திருமணஉறவுகள் ஆகியவற்றை அவர்களுக்கு அனுமதிக்கின்றார். அவற்றில் அசுத்தமானவற்றை அவர்கள் மீது தடைசெய்கிறார். வேண்டுமென்றோ தவறாகவோ கொலை செய்தவனையும் அவசியம் கொலை செய்ய வேண்டும் என்பது போன்ற அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த தாங்க முடியாத கடமைகளை அவர்களை விட்டும் அகற்றுகின்றார். இஸ்ராயீலின் மக்களிலும் மற்றவர்களிலும் அவரை உண்மைப்படுத்தி, கண்ணியப்படுத்தி, அவரை எதிர்க்கும் நிராகரிப்பாளர்களுக்கு எதிராக அவருக்கு உதவி புரிந்து அவர் மீது இறக்கப்பட்ட, நேர்வழி காட்டும் ஒளியான குர்ஆனைப் பின்பற்றுபவர்கள்தாம் வெற்றியாளர்கள். எதிர்பார்த்ததை அடைந்து அஞ்சும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்தவர்கள்.