அல்-முக்தஸர்
قُلْ يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنِّى رَسُولُ ٱللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ ۖ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِ ٱلنَّبِىِّ ٱلْأُمِّىِّ ٱلَّذِى يُؤْمِنُ بِٱللَّهِ وَكَلِمَـٰتِهِۦ وَٱتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ ﴿١٥٨﴾
தூதரே! நீர் கூறுவீராக: “மனிதர்களே! நான் அரபுக்கள் அரபி அல்லாதவர்கள் என உங்கள் அனைவரின்பாலும் அனுப்பப்பட்டுள்ள அல்லாஹ்வின் தூதராவேன். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவனே இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான். உயிருள்ளவர்களை மரணிக்கச் செய்கிறான். எனவே -மனிதர்களே-, நீங்கள் அல்லாஹ்வின் மீதும் எழுதவோ படிக்கவோ தெரியாத அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள். தனது இறைவன் அறிவிக்கும் செய்தியையே அவர் எடுத்து வந்துள்ளார். அவர் அல்லாஹ்வின் மீதும் தமக்கு இறக்கப்பட்டதன் மீதும் தமக்கு முந்தைய தூதர்களுக்கு இறக்கப்பட்டதன் மீது பாகுபாடின்றி நம்பிக்கைகொண்டுள்ளார். இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்கு நன்மைகள் அடங்கியுள்ள நேரான வழியை நீங்கள் அடையும் பொருட்டு அவர் தம் இறைவனிடமிருந்து கொண்டு வந்ததைப் பின்பற்றுங்கள்.