×
الأعرافவசனம் 168

அல்-முக்தஸர்

وَقَطَّعْنَـٰهُمْ فِى ٱلْأَرْضِ أُمَمًا ۖ مِّنْهُمُ ٱلصَّـٰلِحُونَ وَمِنْهُمْ دُونَ ذَٰلِكَ ۖ وَبَلَوْنَـٰهُم بِٱلْحَسَنَـٰتِ وَٱلسَّيِّـَٔاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ ﴿١٦٨﴾

அவர்கள் ஒற்றுமையாக இருந்தபின்னர் நாம் அவர்களை பூமியில் பல பிரிவினராகப் பிரித்து சிறு சிறு கூட்டமாகச் சிதறடித்துவிட்டோம். அவர்களில் அல்லாஹ்வின் கடமைகளையும் அடியார்களின் கடமைகளையும் நிறைவேற்றும் நல்லவர்களும் இருக்கிறார்கள்; நடுநிலையாளர்களும் இருக்கிறார்கள். பாவங்கள் செய்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக்கொண்ட வரம்புமீறியவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு இலகுவைக் கொண்டும் கஷ்டத்தைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்.