×
الأعرافவசனம் 169

அல்-முக்தஸர்

فَخَلَفَ مِنۢ بَعْدِهِمْ خَلْفٌ وَرِثُوا۟ ٱلْكِتَـٰبَ يَأْخُذُونَ عَرَضَ هَـٰذَا ٱلْأَدْنَىٰ وَيَقُولُونَ سَيُغْفَرُ لَنَا وَإِن يَأْتِهِمْ عَرَضٌ مِّثْلُهُۥ يَأْخُذُوهُ ۚ أَلَمْ يُؤْخَذْ عَلَيْهِم مِّيثَـٰقُ ٱلْكِتَـٰبِ أَن لَّا يَقُولُوا۟ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ وَدَرَسُوا۟ مَا فِيهِ ۗ وَٱلدَّارُ ٱلْـَٔاخِرَةُ خَيْرٌ لِّلَّذِينَ يَتَّقُونَ ۗ أَفَلَا تَعْقِلُونَ ﴿١٦٩﴾

இவர்களுக்குப் பின்னர் தீயவர்கள் இவர்களின் வாரிசுகளானார்கள். அவர்கள் தங்கள் முன்னோர்களிடமிருந்து தவ்ராத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் அதனைப் படித்தார்கள். ஆனால் அதன்படி செயல்படவில்லை. அல்லாஹ்வின் வேதத்தை திரிப்பதற்காகவும் அல்லாஹ் இறக்காததன்படி தீர்ப்பளிக்கவும், அற்ப ஆதாயத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறு செய்து விட்டு அல்லாஹ் தங்கள் பாவங்களை மன்னித்துவிடுவான் என்று ஆசைகொண்டார்கள். அவர்கள் உலகின் அற்ப ஆதாயம் கிடைக்கும் போது மீண்டும் மீண்டும் அதனைப் பெற்றுக் கொண்டார்கள். வேதத்தை திரிக்காமல், மாற்றாமல் அல்லாஹ்வின் மீது உண்மை கூற வேண்டும் என்று அல்லாஹ் இவர்களிடம் ஒப்பந்தங்களையும் வாக்குறுதிகளையும் பெறவில்லையா? அவர்கள் அறியாமையினால் வேத்ததின்படி செயல்படாமல் இருக்கவில்லை. மாறாக அறிந்துகொண்டே அவ்வாறு செய்தார்கள். வேதத்திலுள்ளதை அவர்கள் கற்றார்கள், அறிந்து கொண்டார்கள். எனவே அவர்களது பாவம் மிகக் கடுமையானது. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அழியக்கூடிய இவ்வுலக இன்பங்களைவிட நிலையான மறுமையும் அதன் நிரந்தர இன்பங்களுமே சிறந்தவையாகும். அற்ப ஆதாயத்தைப் பெற்றுக்கொள்ளும் இவர்கள், அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் தயார்படுத்தியுள்ளவை மிகச்சிறந்ததும் நிலையானதும் ஆகும் என்பதைச் சிந்திக்க மாட்டார்களா?