×
الأعرافவசனம் 28

அல்-முக்தஸர்

وَإِذَا فَعَلُوا۟ فَـٰحِشَةً قَالُوا۟ وَجَدْنَا عَلَيْهَآ ءَابَآءَنَا وَٱللَّهُ أَمَرَنَا بِهَا ۗ قُلْ إِنَّ ٱللَّهَ لَا يَأْمُرُ بِٱلْفَحْشَآءِ ۖ أَتَقُولُونَ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ ﴿٢٨﴾

இணைவைப்பாளர்கள் இணைவைப்பு, நிர்வாணமாக கஃபாவை வலம் வருதல் போன்ற ஏதேனும் மிக மோசமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, தங்கள் முன்னோர்களும் இவ்வாறே செய்து கொண்டிருந்ததாகவும், அல்லாஹ்தான் அவர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டான் என்றும் காரணம் கூறுகின்றனர். முஹம்மதே! நீர் அவர்களுக்கு மறுப்பாகக் கூறுவீராக: “அல்லாஹ் பாவங்கள் புரியும்படி ஏவமாட்டான். மாறாக பாவங்கள் புரிவதைத் தடுக்கிறான். அவ்வாறிருக்கும் போது அவன்தான் பாவங்களை ஏவினான் என எவ்வாறு கூறலாம்? இணைவைப்பாளர்களே! நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?”