×
الأعرافவசனம் 29

அல்-முக்தஸர்

قُلْ أَمَرَ رَبِّى بِٱلْقِسْطِ ۖ وَأَقِيمُوا۟ وُجُوهَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَٱدْعُوهُ مُخْلِصِينَ لَهُ ٱلدِّينَ ۚ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ ﴿٢٩﴾

முஹம்மதே! இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நீதியாக நடக்கும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். மானக்கேடானவற்றையும் தீயவற்றையும் அவன் கட்டளையிடுவதில்லை. பொதுவாகவும் குறிப்பாக பள்ளிவாயில்களிலும் அவனுக்கு மட்டும் வணக்க வழிபாட்டை உரித்தாக்க வேண்டும், அவனிடம் மட்டுமே கீழ்ப்படிந்து பிரார்த்திக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். ஆரம்பத்தில் இல்லாததிலிருந்து உங்களைப் படைத்தது போன்று மீண்டும் உயிரோடு உங்களைக் கொண்டுவருவான். உங்களை ஆரம்பத்தில் படைத்தவன் உங்களுக்கு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கும் ஆற்றலுடையவன்.