அல்-முக்தஸர்
فَرِيقًا هَدَىٰ وَفَرِيقًا حَقَّ عَلَيْهِمُ ٱلضَّلَـٰلَةُ ۗ إِنَّهُمُ ٱتَّخَذُوا۟ ٱلشَّيَـٰطِينَ أَوْلِيَآءَ مِن دُونِ ٱللَّهِ وَيَحْسَبُونَ أَنَّهُم مُّهْتَدُونَ ﴿٣٠﴾
அல்லாஹ் மனிதர்களை இரு பிரிவினராக ஆக்கியுள்ளான். அவர்களில் ஒரு பிரிவினருக்கு நேர்வழிகாட்டி நேர்வழிக்கான வழிகளையும் அவர்களுக்கு இலகுபடுத்தி தடைகளையும் அகற்றியுள்ளான். மற்றொரு பிரிவினர் மீது நேர்வழியை விட்டும் வழிகேடு உறுதியாகிவிட்டது. அதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வை விடுத்து ஷைத்தான்களை நேசர்களாக ஆக்கிக் கொண்டார்கள். அறியாமையினால் அந்த ஷைத்தான்களுக்குக் கட்டுப்பட்டார்கள். தாங்கள் நேர்வழியில் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.