அல்-முக்தஸர்
يَـٰبَنِىٓ ءَادَمَ خُذُوا۟ زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا۟ وَٱشْرَبُوا۟ وَلَا تُسْرِفُوٓا۟ ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْرِفِينَ ﴿٣١﴾
ஆதமுடைய மக்களே! உங்களின் மறைவிடங்களை மறைத்து, உங்களை அழகுபடுத்தும் தூய்மையான ஆடையை தொழுகையின்போதும் தவாபின் போதும் அணிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அனுமதித்த தூய்மையானவற்றிலிருந்து நீங்கள் விரும்பியதை உண்ணுங்கள், பருகுங்கள். அவற்றில் நடுநிலையை மீறாதீர்கள். அனுமதிக்கப்பட்டதை மீறி தடைசெய்யப்பட்டதற்கு சென்றுவிடாதீர்கள். நிச்சயமாக நடுநிலையைப் பேணாமல் வரம்புமீறக்கூடியவர்களை அவன் நேசிப்பதில்லை.