×
الأعرافவசனம் 32

அல்-முக்தஸர்

قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ ٱللَّهِ ٱلَّتِىٓ أَخْرَجَ لِعِبَادِهِۦ وَٱلطَّيِّبَـٰتِ مِنَ ٱلرِّزْقِ ۚ قُلْ هِىَ لِلَّذِينَ ءَامَنُوا۟ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا خَالِصَةً يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلْـَٔايَـٰتِ لِقَوْمٍ يَعْلَمُونَ ﴿٣٢﴾

தூதரே! அல்லாஹ் அனுமதித்த ஆடையையும் தூய்மையான உணவுகளையும் தடைசெய்யும் இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “உங்களை அழகுபடுத்தக்கூடிய ஆடையை உங்களுக்குத் தடைசெய்தது யார்? அவன் வழங்கிய தூய்மையான உணவுகளையும் பானங்களையும் பிற பொருள்களையும் உங்களுக்குத் தடைசெய்தது யார்? தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “தூய்மையான இந்த பொருள்கள் இவ்வுலகில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு வழங்கியவையாகும். இவ்வுலகில் நம்பிக்கையாளர்களைத் தவிர மற்றவர்களும் அதில் பங்கு பெற்றாலும் மறுமை நாளில் இவை நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உரியவையாகும். நிராகரிப்பாளர்களுக்கு அவற்றில் எந்தப் பங்கும் கிடைக்காது. ஏனெனில் சுவனம் நிராகரிப்பாளர்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற விளக்கத்தின் மூலம் நாம் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு வசனங்களைத் தெளிவுபடுத்துகின்றோம். அவர்கள்தாம் இவற்றைக் கொண்டு பயனடைவார்கள்.