அல்-முக்தஸர்
قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّىَ ٱلْفَوَٰحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَٱلْإِثْمَ وَٱلْبَغْىَ بِغَيْرِ ٱلْحَقِّ وَأَن تُشْرِكُوا۟ بِٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ سُلْطَـٰنًا وَأَن تَقُولُوا۟ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ ﴿٣٣﴾
தூதரே! அல்லாஹ் அனுமதித்ததைத் தடைசெய்யும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் மீது வெளிப்படையான மறைமுகமான மானக்கேடானவற்றைத் தடைசெய்துள்ளான். அவை அருவருப்பான பாவங்களாகும். அனைத்துப் பாவங்களையும் மக்களின் உயிர்களிலும் செல்வங்களிலும் மானங்களிலும் வரம்புமீறுவதையும் அவன் தடைசெய்துள்ளான். அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குவதையும் அவன் தடைசெய்துள்ளான். அதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவனுடைய பெயர்களில், பண்புகளில், செயல்களில் மார்க்கத்தில் அறிவின்றி அவன் மீது அவதூறு கூறுவதையும் அவன் தடைசெய்துள்ளான்.