×
الأعرافவசனம் 54

அல்-முக்தஸர்

إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ يُغْشِى ٱلَّيْلَ ٱلنَّهَارَ يَطْلُبُهُۥ حَثِيثًا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ وَٱلنُّجُومَ مُسَخَّرَٰتٍۭ بِأَمْرِهِۦٓ ۗ أَلَا لَهُ ٱلْخَلْقُ وَٱلْأَمْرُ ۗ تَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ ﴿٥٤﴾

மனிதர்களே! வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி ஆறுநாட்களில் படைத்தவனே உங்கள் இறைவனாவான். பின்னர் அவன் தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். நம்மால் அது எவ்வாறு என்பதை உணர்ந்து கொள்ள முடியாது அவன் இரவின் இருளை பகலின் வெளிச்சத்தைக் கொண்டும் பகலின் வெளிச்சத்தை இரவின் இருளைக் கொண்டும் போக்குகிறான். அவற்றில் ஒவ்வொன்றும் மற்றதை வேகமாக தாமதமின்றி பின்தொடர்கிறது. இது சென்றுவிட்டால் அது நுழைந்து விடும். அவன் சூரியனையும் சந்திரனையும் படைத்துள்ளான். வசப்படுத்தப்பட்டுள்ள நட்சத்திரங்களையும் படைத்துள்ளான். அறிந்து கொள்ளுங்கள், படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனைத் தவிர வேறு படைப்பாளன் இருக்கிறானா? அதிகாரம் அனைத்தும் அவனிடமே உள்ளது. அவன் நலவும் உபகாரமும் மகத்தானதும் அதிகமானதுமாகும். கண்ணியம், பரிபூரணம் ஆகிய பண்புகளை உடைய அவன் உலகிலுள்ள அனைத்தையும் படைத்துப் பரிபாலிப்பவனாவான்.