அல்-முக்தஸர்
ٱدْعُوا۟ رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ ﴿٥٥﴾
நம்பிக்கையாளர்களே! உங்கள் இறைவனை பூரண பணிவோடும், இரகசியமாகவும் முகஸ்துதி இல்லாமலும் பிரார்த்தனையில் மற்றவர்களை அவனுக்கு இணையாக்காமலும் உளத்தூய்மையோடு அழையுங்கள். நிச்சயமாக, பிரார்த்தனையில் தான் விதித்த வரம்புகளை மீறக்கூடியவர்களை அவன் நேசிப்பதில்லை. இணைவைப்பாளர்களைப் போல், அல்லாஹ்வுடன் மற்றவர்களிடமும் பிரார்த்தனை செய்வது பாரதூரமான வரம்பு மீறல்களிலுள்ளதாகும்.