அல்-முக்தஸர்
وَلَا تُفْسِدُوا۟ فِى ٱلْأَرْضِ بَعْدَ إِصْلَـٰحِهَا وَٱدْعُوهُ خَوْفًا وَطَمَعًا ۚ إِنَّ رَحْمَتَ ٱللَّهِ قَرِيبٌ مِّنَ ٱلْمُحْسِنِينَ ﴿٥٦﴾
தூதர்களை அனுப்பி அல்லாஹ் பூமியை சீர்படுத்தி அவனை மாத்திரம் வழிபடுவதன் மூலம் செழிப்பாக்கிய பிறகு பாவங்கள் புரிந்து அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சியவர்களாக, அவனுடைய நன்மையில் ஆசைகொண்டவர்களாக அவனையே அழையுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு நெருக்கமாகவே இருக்கின்றது. எனவே நன்மை செய்பவர்களில் ஆகிவிடுங்கள்.