×
الأعرافவசனம் 57

அல்-முக்தஸர்

وَهُوَ ٱلَّذِى يُرْسِلُ ٱلرِّيَـٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهِۦ ۖ حَتَّىٰٓ إِذَآ أَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنَـٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَأَنزَلْنَا بِهِ ٱلْمَآءَ فَأَخْرَجْنَا بِهِۦ مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ ۚ كَذَٰلِكَ نُخْرِجُ ٱلْمَوْتَىٰ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ﴿٥٧﴾

அல்லாஹ்தான் காற்றை மழையைக் கொண்டு நற்செய்தி கூறக்கூடியவையாக அனுப்புகிறான். காற்று, நீர் நிரம்பிய கனமான மேகங்களைச் சுமந்தால் நாம் அந்த மேகத்தை பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஊருக்குக் கொண்டு சென்று அங்கு மழையைப் பொழியச் செய்கின்றோம். அந்த மழையின் மூலம் எல்லா வகையான விளைச்சல்களையும் வெளிப்படுத்துகின்றோம். விளைச்சலை வெளிப்படுத்துவது போன்றே நாம் இறந்தவர்களை அடக்கஸ்த்தலத்திலிருந்து உயிரோடு வெளிப்படுத்துகின்றோம். மனிதர்களே! அல்லாஹ்வின் ஆற்றலையும் வியக்கத்தக்க செயலையும், அவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன் என்பதையும் நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டே நாம் இவ்வாறு செய்தோம்.