அல்-முக்தஸர்
وَٱلْبَلَدُ ٱلطَّيِّبُ يَخْرُجُ نَبَاتُهُۥ بِإِذْنِ رَبِّهِۦ ۖ وَٱلَّذِى خَبُثَ لَا يَخْرُجُ إِلَّا نَكِدًا ۚ كَذَٰلِكَ نُصَرِّفُ ٱلْـَٔايَـٰتِ لِقَوْمٍ يَشْكُرُونَ ﴿٥٨﴾
நல்ல நிலம் அல்லாஹ்வின் அனுமதியுடன் நல்ல, முழுமையான விளைச்சலை வெளிப்படுத்தும். இவ்வாறே நம்பிக்கையாளன் அறிவுரையைச் செவியேற்கிறான். அதனைக் கொண்டு பயனடைகிறான், நற்செயல்கள் புரிகிறான். உவர்ப்புத் தன்மையுடைய சதுப்பு நிலம் மோசமானவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தாது. அதில் எவ்வித நலவுமில்லை. இவ்வாறே நிராகரிப்பாளன் அறிவுரைகளைக் கொண்டு பயனடைவதில்லை. அவை அவனுக்குப் பயனளிக்கும் நற்செயல்களையும் அவனிடத்தில் உருவாக்கமாட்டா. இங்கு அற்புதமான பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டது போன்று, உண்மையை நிரூபிப்பதற்காக அத்தாட்சிகளையும் ஆதாரங்களையும் பல்வேறு விதங்களில் அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரிக்காமல் நன்றி செலுத்தி தமது இறைவனுக்குக் கட்டுப்படும் மக்களுக்குத் தெளிவுபடுத்துகின்றோம்.