×
الأعرافவசனம் 95

அல்-முக்தஸர்

ثُمَّ بَدَّلْنَا مَكَانَ ٱلسَّيِّئَةِ ٱلْحَسَنَةَ حَتَّىٰ عَفَوا۟ وَّقَالُوا۟ قَدْ مَسَّ ءَابَآءَنَا ٱلضَّرَّآءُ وَٱلسَّرَّآءُ فَأَخَذْنَـٰهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ ﴿٩٥﴾

பின்னர் கஷ்டம் நோய் ஆகியவற்றைக் கொண்டு அவர்களைத் தண்டித்த பிறகு அவர்களுக்கு நன்மையையும், விசாலத்தையையும், அமைதியையும் வழங்குகிறோம். எந்த அளவுக்கெனில் அவர்களும் பல்கிப் பெருகி அவர்களது சொத்துக்களும் அதிகரித்துவிடுகின்றன. அவர்கள் கூறுகிறார்கள்: “எங்களுக்கு ஏற்பட்ட இன்பங்களும் துன்பங்களும் நமது முன்னோர்களுக்கு இதற்கு முன் நிகழ்ந்த ஒரு வழமையான நிகழ்வுதான்.” தங்களுக்குக் கிடைத்த தண்டனையின் மூலம் படிப்பினையே நாடப்பட்டது என்பதையும் வழங்கப்பட்ட அருட்கொடையின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக இறைவன் பிடிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லை. அவர்கள் வேதனையை உணராமலும் அதனை எதிர்பார்க்காமலும் இருந்த சமயத்தில் திடீரென வேதனையால் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம்.