×
الأعرافவசனம் 96

அல்-முக்தஸர்

وَلَوْ أَنَّ أَهْلَ ٱلْقُرَىٰٓ ءَامَنُوا۟ وَٱتَّقَوْا۟ لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَـٰتٍ مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ وَلَـٰكِن كَذَّبُوا۟ فَأَخَذْنَـٰهُم بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ ﴿٩٦﴾

நாம் எந்த ஊர்வாசிகளிடம் நம் தூதர்களை அனுப்பினோமோ அவர்கள் தங்களின் தூதர்கள் கொண்டு வந்ததை உண்மைப்படுத்தியிருந்தால், அல்லாஹ்வை நிராகரிப்பதையும் பாவங்கள் புரிவதையும் விட்டுவிட்டு அவன் கட்டளைகளைச் செயல்படுத்தி அவனை அஞ்சியிருந்தால் நன்மையின் வாயில்களையும் நாலாபுறத்தாலும் அவர்களுக்காகத் திறந்து விட்டிருப்போம். ஆயினும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவுமில்லை; தக்வாவைக் கடைப்பிடிக்கவுமில்லை. மாறாக தூதர்கள் கொண்டு வந்ததை நிராகரித்தார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருந்த பாவங்களின் காரணமாக திடீரென்று அவர்களை வேதனையால் பிடித்துக் கொண்டோம்.