×
الأنفالவசனம் 11

அல்-முக்தஸர்

إِذْ يُغَشِّيكُمُ ٱلنُّعَاسَ أَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ ٱلسَّمَآءِ مَآءً لِّيُطَهِّرَكُم بِهِۦ وَيُذْهِبَ عَنكُمْ رِجْزَ ٱلشَّيْطَـٰنِ وَلِيَرْبِطَ عَلَىٰ قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ ٱلْأَقْدَامَ ﴿١١﴾

நம்பிக்கையாளர்களே!- அவன் உங்களுக்கு ஏற்பட்ட எதிரிகளைப் பற்றிய பயத்தைப் போக்க, சிறு தூக்கத்தை அளித்ததை நினைவுகூருங்கள். அழுக்குகளிலிருந்து உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும் ஷைத்தானின் ஊசலாட்டங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும் போரின் போது உங்கள் உடல்கள் நிலைத்து நிற்க உங்களின் உள்ளங்களையும் உறுதிப்படுத்துவதற்காகவும் மணல் நிலத்தை ஈரப்படுத்தி உங்கள் பாதங்கள் புதைந்துவிடாதவாறு அதனை உறுதிப்படுத்துவதற்காகவும் அவன் வானத்திலிருந்து உங்கள் மீது மழையை இறக்கினான்.