அல்-முக்தஸர்
إِذْ يُوحِى رَبُّكَ إِلَى ٱلْمَلَـٰٓئِكَةِ أَنِّى مَعَكُمْ فَثَبِّتُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ۚ سَأُلْقِى فِى قُلُوبِ ٱلَّذِينَ كَفَرُوا۟ ٱلرُّعْبَ فَٱضْرِبُوا۟ فَوْقَ ٱلْأَعْنَاقِ وَٱضْرِبُوا۟ مِنْهُمْ كُلَّ بَنَانٍ ﴿١٢﴾
தூதரே!- பத்ரில் நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிவதற்காக அனுப்பப்பட்ட வானவர்களுக்கு உம் இறைவன் அறிவிப்பு செய்தான்: -“வானவர்களே!- உதவி மற்றும் ஆதரவின் மூலம் நான் உங்களுடன் இருக்கின்றேன். எதிரிகளுக்கு எதிரான போரில் நம்பிக்கையாளர்களின் உறுதிகளைப் பலப்படுத்துங்கள். நிராகரிப்பாளர்களின் உள்ளங்களில் நான் கடுமையான பயத்தை ஏற்படுத்திவிடுவேன். எனவே -நம்பிக்கையாளர்களே!- நிராகரிப்பாளர்களின் கழுத்துகளை அவர்கள் இறப்பதற்காக வெட்டுங்கள். அவர்கள் போர் செய்ய முடியாதவாறு செயலிழந்து செல்வதற்காக அவர்களின் ஒவ்வொரு மூட்டுக்களையும் உறுப்புக்களையும் தாக்குங்கள்.”