×
الأنفالவசனம் 42

அல்-முக்தஸர்

إِذْ أَنتُم بِٱلْعُدْوَةِ ٱلدُّنْيَا وَهُم بِٱلْعُدْوَةِ ٱلْقُصْوَىٰ وَٱلرَّكْبُ أَسْفَلَ مِنكُمْ ۚ وَلَوْ تَوَاعَدتُّمْ لَٱخْتَلَفْتُمْ فِى ٱلْمِيعَـٰدِ ۙ وَلَـٰكِن لِّيَقْضِىَ ٱللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا لِّيَهْلِكَ مَنْ هَلَكَ عَنۢ بَيِّنَةٍ وَيَحْيَىٰ مَنْ حَىَّ عَنۢ بَيِّنَةٍ ۗ وَإِنَّ ٱللَّهَ لَسَمِيعٌ عَلِيمٌ ﴿٤٢﴾

நீங்கள் மதீனாவிற்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கிலும், இணைவைப்பாளர்கள் மக்கா பகுதியிலுள்ள மதீனாவை விட்டும் தூரமான பள்ளத்தாக்கிலும், வியாபாரக் குழு செங்கடலுக்கு அருகில் நீங்கள் இருக்கும் இடத்தைவிட தாழ்வான இடத்திலும் இருந்ததை நினைவு கூறுங்கள். நீங்களும் இணைவைப்பாளர்களும் பத்ரில் சந்திப்பதற்கு நேரம் குறித்திருந்தால் ஒருவருக்கொருவர் முரண்பட்டிருப்பீர்கள். ஆனால் அல்லாஹ் நேரம் குறிக்காமலே அங்கு உங்களை ஒன்று சேர்த்தான். இது, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்து நிராகரிப்பாளர்களைக் கைவிட்டு விடுவதற்காகவும், தன் மார்க்கத்தை மேலோங்கச் செய்து ஷிர்க்கை இழிவுபடுத்தி தான் விரும்பும் விஷயத்தை நிகழ்த்துவதற்காகவேயாகும். இது, நம்பிக்கையாளர்கள் ஆள் மற்றும் ஆயுத பலத்திலும் குறைவாக இருந்தும் தம்மை வென்றுவிட்டதன் மூலம் தெளிவான ஆதாரம் நிரூபனமான பின் நிராகரிப்பாளர்களில் அழிந்தோர் அழிந்துவிட வேண்டும் என்பதற்காகவும் உயிர்வாழ்பவர்கள் அல்லாஹ் அவர்களுக்கு வெளிப்படுத்திய தெளிவான ஆதாரத்துடன் உயிர்வாழ வேண்டும் என்பதற்காகவும்தான். எனவே அல்லாஹ்விடம் வாதிட ஒருவருக்கும் ஆதாரம் எஞ்சியிருக்காது. அனைவரின் பேச்சையும் அல்லாஹ் செவியேற்கிறான். அவர்களின் செயல்களைக் குறித்து அவன் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.