அல்-முக்தஸர்
إِذْ يُرِيكَهُمُ ٱللَّهُ فِى مَنَامِكَ قَلِيلًا ۖ وَلَوْ أَرَىٰكَهُمْ كَثِيرًا لَّفَشِلْتُمْ وَلَتَنَـٰزَعْتُمْ فِى ٱلْأَمْرِ وَلَـٰكِنَّ ٱللَّهَ سَلَّمَ ۗ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿٤٣﴾
தூதரே!- அல்லாஹ் உம்மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் பொழிந்த அருட்கொடைகளை நினைவுகூர்வீராக. உம்முடைய கனவிலே இணைவைப்பாளர்களை குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டினான். நீர் நம்பிக்கையாளர்களுக்கு இதனை அறிவித்தீர். அவர்கள் இதைக் கொண்டு நற்செய்தி பெற்றுக்கொண்டார்கள். இதனால் எதிரிகளைச் சந்தித்து போரிட வேண்டும் என்ற அவர்களின் எண்ணங்கள் உறுதியாகிவிட்டன. அல்லாஹ் இணைவைப்பாளர்களை உம் கனவிலே அதிக எண்ணிக்கையினராகக் காட்டியிருந்தால் உம்முடைய தோழர்கள் மனந்தளர்ந்திருப்பார்கள்; போர்புரிய அஞ்சியிருப்பார்கள். ஆனாலும் அல்லாஹ் அவர்களை இதிலிருந்து பாதுகாத்து தோல்வியிலிருந்தும் பாதுகாத்தான். தன் தூதரின் கண்களுக்கு அவர்களைக் குறைத்துக் காட்டினான். அவர்களின் உள்ளங்கள் மறைப்பதையும் அவன் நன்கறிந்தவன்.