×
الأنفالவசனம் 44

அல்-முக்தஸர்

وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ ٱلْتَقَيْتُمْ فِىٓ أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِىٓ أَعْيُنِهِمْ لِيَقْضِىَ ٱللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا ۗ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ ﴿٤٤﴾

நம்பிக்கையாளர்களே!- நீங்கள் இணைவைப்பாளர்களைச் சந்தித்த போது அல்லாஹ் அவர்களை உங்களுக்குக் குறைத்துக் காட்டியதை நினைவுகூருங்கள். அது அவர்களுடன் போர் புரிய உங்களைத் தூண்டியது. அதேபோன்று இணைவைப்பாளர்களும் பின்வாங்கிச் செல்லாமல் அவர்களும் உங்களுடன் போரிட முன்வருவதற்காக அவர்களின் கண்களுக்கும் உங்களைக் குறைத்துக் காட்டினான். கொலை, கைது ஆகியவற்றின் மூலம் இணைவைப்பாளர்களைப் பழிவாங்கி, எதிரிகளுக்கெதிராக வெற்றியை அளித்து நம்பிக்கையாளர்களுக்கு அருள் புரிந்து முடிவு செய்யப்பட்ட ஒரு காரியத்தை நடாத்துவதற்காகவே இவ்வாறு செய்தான். அல்லாஹ்வின் பக்கமே விவகாரங்கள் அனைத்தும் திரும்புகின்றன. அவன் தீயவர்கள் செய்த தீய செயல்களுக்காக தண்டனை வழங்குகிறான். நல்லவர்கள் செய்த நற்செயல்களுக்காக வெகுமதி வழங்குகிறான்.