அல்-முக்தஸர்
وَلَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ خَرَجُوا۟ مِن دِيَـٰرِهِم بَطَرًا وَرِئَآءَ ٱلنَّاسِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ وَٱللَّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ ﴿٤٧﴾
மக்காவிலிருந்து பெருமைக்காகவும் மக்களிடம் காட்டுவதற்காவும் புறப்பட்ட இணைவைப்பாளர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு மக்களைத் தடுக்கிறார்கள். அதில் நுழைவதை விட்டும் அவர்களைத் தடுக்கின்றனர். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் சூழ்ந்தவனாக இருக்கின்றான். அவர்கள் செய்யும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.