×
الأنفالவசனம் 48

அல்-முக்தஸர்

وَإِذْ زَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَـٰنُ أَعْمَـٰلَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ ٱلْيَوْمَ مِنَ ٱلنَّاسِ وَإِنِّى جَارٌ لَّكُمْ ۖ فَلَمَّا تَرَآءَتِ ٱلْفِئَتَانِ نَكَصَ عَلَىٰ عَقِبَيْهِ وَقَالَ إِنِّى بَرِىٓءٌ مِّنكُمْ إِنِّىٓ أَرَىٰ مَا لَا تَرَوْنَ إِنِّىٓ أَخَافُ ٱللَّهَ ۚ وَٱللَّهُ شَدِيدُ ٱلْعِقَابِ ﴿٤٨﴾

நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த பின்வரும் அருட்கொடைகளை நினைவுகூருங்கள்: “இணைவைப்பாளர்களின் செயல்களை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான். முஸ்லிம்களுக்கு எதிராக போரிடுமாறு அவர்களை ஊக்கப்படுத்தினான். அவர்களிடம் கூறினான்: “இன்று உங்களை மிகைப்பவர்கள் யாரும் இல்லை. நான் உங்களுக்கு உதவிபுரியக் கூடியவன். உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களைப் பாதுகாக்கக் கூடியவன்.” நம்பிக்கையாளர்களுடன் உதவிபுரியும் வானவர்களும், இணைவைப்பாளர்களுடன் கைவிடும் ஷைத்தானும் சேர்ந்து கொண்டு இரு அணிகளும் சந்தித்த போது ஷைத்தான் பின்வாங்கி ஓடிவிட்டான். அவன் இணைவைப்பாளர்களிடம் கூறினான்: “உங்களைவிட்டும் நான் நீங்கி விட்டேன். நம்பிக்கையாளர்களுக்கு உதவிபுரிவதற்காக வந்த வானவர்களை நான் காண்கிறேன். அல்லாஹ் என்னை அழித்து விடுவான் என்று நான் அஞ்சுகிறேன். அவன் தண்டிப்பதில் கடுமையானவன். அவனுடைய தண்டனையை யாராலும் தாங்க முடியாது.”