×
الأنفالவசனம் 49

அல்-முக்தஸர்

إِذْ يَقُولُ ٱلْمُنَـٰفِقُونَ وَٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ غَرَّ هَـٰٓؤُلَآءِ دِينُهُمْ ۗ وَمَن يَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ﴿٤٩﴾

நயவஞ்சகர்களும் பலவீனமான நம்பிக்கையாளர்களும் பின்வருமாறு கூறியதை நினைவுகூருங்கள்: “இந்த முஸ்லிம்களை அவர்களின் மார்க்கம் ஏமாற்றி விட்டது. ஆள் மற்றும் ஆயுத பலத்தில் அவர்கள் குறைவாகவும் அவர்களது எதிரிகள் அதிகமாகவும் இருந்தாலும் பலம் குன்றிய அவர்களே வெற்றிபெறுவர் என அவர்களுக்கு வாக்களிக்கின்றது. ” அல்லாஹ்வை மட்டுமே சார்ந்து, அவன் வாக்களித்த வெற்றியின் மீது நம்பிக்கைகொண்டோருக்கு அல்லாஹ் உதவி செய்வான், எவ்வளவு பலவீனம் இருந்தாலும் அவர்களை ஒருபோதும் கைவிட மாட்டான் என்பதை இவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தான் அமைத்த விதிகளில், சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.