×
الأنفالவசனம் 50

அல்-முக்தஸர்

وَلَوْ تَرَىٰٓ إِذْ يَتَوَفَّى ٱلَّذِينَ كَفَرُوا۟ ۙ ٱلْمَلَـٰٓئِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَـٰرَهُمْ وَذُوقُوا۟ عَذَابَ ٱلْحَرِيقِ ﴿٥٠﴾

தூதரே!- அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது நீர் அவர்களைக் காண வேண்டுமே! அவர்கள் முன்னோக்கினால் அவர்களின் முகங்களில் அடித்தவாறு பின்வாங்கி ஓடினால் முதுகுகளில் அடித்தவாறு வானவர்கள் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றுவார்கள். அவர்களிடம் கூறுவார்கள்: -“நிராகரிப்பாளர்களே!- எரிக்கக்கூடிய வேதனையைச் சுவையுங்கள்.” நீர் அதனைக் கண்டால் பெரும் விஷயத்தைக் கண்டவராவீர்.