அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ حَرِّضِ ٱلْمُؤْمِنِينَ عَلَى ٱلْقِتَالِ ۚ إِن يَكُن مِّنكُمْ عِشْرُونَ صَـٰبِرُونَ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌ يَغْلِبُوٓا۟ أَلْفًا مِّنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ ﴿٦٥﴾
நபியே! நம்பிக்கையாளர்களைப் போர் புரியத் தூண்டுவீராக. அவர்களின் எண்ணங்களை உறுதிப்படுத்தி அதன்பால் ஊக்கமளிப்பீராக. -நம்பிக்கையாளர்களே!- உங்களில் நிராகரிப்பாளர்களுடன் போரிடுவதில் பொறுமையுள்ள இருபது பேர்கள் இருந்தால் அவர்கள் இருநூறு நிராகரிப்பாளர்களை வென்று விடலாம். உங்களில் நூறு பொறுமையாளர்கள் இருந்தால் அவர்கள் ஆயிரம் நிராகரிப்பாளர்களை வென்றுவிடலாம். இது ஏனெனில், நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் தன் எதிரிகளை அழித்து நேசர்களுக்கு உதவி புரிவான் என்ற அல்லாஹ்வின் நியதியை புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். போரின் நோக்கத்தை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. உலகில் ஆதிக்கத்தை நிலைநாட்டவே அவர்கள் போர் புரிகிறார்கள்.