×
الأنفالவசனம் 66

அல்-முக்தஸர்

ٱلْـَٔـٰنَ خَفَّفَ ٱللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا ۚ فَإِن يَكُن مِّنكُم مِّا۟ئَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا۟ مِا۟ئَتَيْنِ ۚ وَإِن يَكُن مِّنكُمْ أَلْفٌ يَغْلِبُوٓا۟ أَلْفَيْنِ بِإِذْنِ ٱللَّهِ ۗ وَٱللَّهُ مَعَ ٱلصَّـٰبِرِينَ ﴿٦٦﴾

நம்பிக்கையாளர்களே!- உங்களது பலவீனத்தை அல்லாஹ் அறிந்ததனால் அவன் உங்கள் மீது கருணை காட்டும் முகமாக உங்கள் மீதுள்ள சுமையைக் குறைத்துவிட்டான். உங்களில் ஒருவர் பத்து நிராகரிப்பாளர்களை எதிர்ப்பதற்குப் பதிலாக இரு நிராகரிப்பாளர்களை எதிர்ப்பதை அவன் உங்கள் மீது கடமையாக்கிவிட்டான். உங்களில் நூறு பொறுமையாளர்கள் இருந்தால் அவர்கள் இருநூறு நிராகரிப்பாளர்களை போரில் வெல்லலாம். உங்களில் ஆயிரம் பொறுமையாளர்கள் இருந்தால் அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இரண்டாயிரம் நிராகரிப்பாளர்களை வெல்லலாம். அல்லாஹ் நம்பிக்கை கொண்ட பொறுமையாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்களுடன் இருக்கின்றான்.