×
الأنفالவசனம் 67

அல்-முக்தஸர்

مَا كَانَ لِنَبِىٍّ أَن يَكُونَ لَهُۥٓ أَسْرَىٰ حَتَّىٰ يُثْخِنَ فِى ٱلْأَرْضِ ۚ تُرِيدُونَ عَرَضَ ٱلدُّنْيَا وَٱللَّهُ يُرِيدُ ٱلْـَٔاخِرَةَ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ ﴿٦٧﴾

நிராகரிப்பாளர்களை கொன்று குவிக்கும் வரை அவர்களைக் கைதிகளாகப் பிடிப்பது தூதருக்கு உகந்ததல்ல. அப்போதுதான் அவர்களின் உள்ளங்களில் பயம் புகுந்து கொள்ளும். அவர்கள் மீண்டும் போரிட மாட்டார்கள். -நம்பிக்கையாளர்களே!- பத்ரில் கைதிகளாகப் பிடிக்கப்பட்டர்களிடம் பிணைத் தொகை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? அல்லாஹ்வோ மார்க்கத்திற்கு உதவி செய்து கிடைக்கும் மறுமையை விரும்புகிறான். தன் உள்ளமையில் பண்புகளில் அடக்கியாள்வதில் அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாரும் அவனை மிகைத்துவிட முடியாது. தான் அமைத்த விதிகளில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவன்.