அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ قُل لِّمَن فِىٓ أَيْدِيكُم مِّنَ ٱلْأَسْرَىٰٓ إِن يَعْلَمِ ٱللَّهُ فِى قُلُوبِكُمْ خَيْرًا يُؤْتِكُمْ خَيْرًا مِّمَّآ أُخِذَ مِنكُمْ وَيَغْفِرْ لَكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ ﴿٧٠﴾
நபியே! பத்ருப் போரில் உம்மிடம் அகப்பட்ட கைதிகளிடம் கூறுவீராக: “உங்கள் உள்ளங்களில் நல்லெண்ணம் இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து பெறப்பட்ட பிணைத் தொகையைவிட சிறந்த நன்மைகளை உங்களுக்கு அளிப்பான். எனவே உங்களிடமிருந்து பெறப்பட்ட பிணைத் தொகைக்காக கவலைப்படாதீர்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். அல்லாஹ்வின் இந்த வாக்குறுதி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நபியவர்களின் சிறிய தந்தை அப்பாஸ் மற்றும் ஏனையவர்கள் விஷயத்திலும் நிறைவேறியது.