×
الأنفالவசனம் 71

அல்-முக்தஸர்

وَإِن يُرِيدُوا۟ خِيَانَتَكَ فَقَدْ خَانُوا۟ ٱللَّهَ مِن قَبْلُ فَأَمْكَنَ مِنْهُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿٧١﴾

முஹம்மதே!- உம்மிடம் வெளிப்படுத்தும் இந்த வார்த்தைகளின் மூலம் உமக்கு துரோகமிழைக்க அவர்கள் விரும்பினால், இதற்கு முன்னால் அவர்கள் அல்லாஹ்வுக்கு துரோகமிழைத்து விட்டார்கள். அவர்களுக்கு எதிராக அல்லாஹ் உமக்கு உதவி செய்துள்ளான். அவர்களில் சிலர் கொல்லப்பட்டார்கள். சிலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். அவர்கள் மீண்டும் அவ்வாறு செய்தால் இதையே எதிர்பார்க்கட்டும். அல்லாஹ் தன் படைப்புகளையும் அவற்றுக்கு நன்மையளிக்கக்கூடியவற்றையும் நன்கறிவான். தன் நிர்வாகத்தில் அவன் ஞானம்மிக்கவன்.