×
الأنفالவசனம் 72

அல்-முக்தஸர்

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَهَاجَرُوا۟ وَجَـٰهَدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلَّذِينَ ءَاوَوا۟ وَّنَصَرُوٓا۟ أُو۟لَـٰٓئِكَ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍ ۚ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَلَمْ يُهَاجِرُوا۟ مَا لَكُم مِّن وَلَـٰيَتِهِم مِّن شَىْءٍ حَتَّىٰ يُهَاجِرُوا۟ ۚ وَإِنِ ٱسْتَنصَرُوكُمْ فِى ٱلدِّينِ فَعَلَيْكُمُ ٱلنَّصْرُ إِلَّا عَلَىٰ قَوْمٍۭ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَـٰقٌ ۗ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ﴿٧٢﴾

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதரை உண்மைப்படுத்தி, அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டு, நிராகரிப்பாளர்கள் வாழும் நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டினை நோக்கி அல்லது அல்லாஹ்வை அமைதியாக வணங்க முடியுமான இடத்தை நோக்கி புலம்பெயர்ந்து, தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காக ஜிஹாது செய்தவர்களும் தங்களில் வீடுகளில் அவர்களைத் தங்க வைத்து அவர்களுக்கு உதவி புரிந்தவர்களும் உதவி செய்வதில் ஒருவருக்கொருவர் தோழர்களாக இருக்கின்றார்கள். -நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு ஆனால் இஸ்லாமிய நாட்டினை நோக்கி புலம்பெயராதவர்கள், அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயரும் வரை அவர்களுக்கு உதவிபுரிவதோ பாதுகாப்பு அளிப்பதோ உங்கள் மீது கடமையில்லை. நிராகரிப்பாளர்கள் அவர்கள் மீது அநீதி இழைத்து அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் அவர்களின் எதிரிகளுக்கு எதிராக அவர்களுக்கு உதவி புரியுங்கள். ஆனால் உங்களுக்கும் அவர்களின் எதிரிகளுக்கும் அவர்கள் மீறாத ஏதேனும் ஒப்பந்தம் இருந்தாலே தவிர. நீங்கள் செய்யக் கூடியவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். உங்களின் செயல்கள் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.