×
التوبةவசனம் 105

அல்-முக்தஸர்

وَقُلِ ٱعْمَلُوا۟ فَسَيَرَى ٱللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُۥ وَٱلْمُؤْمِنُونَ ۖ وَسَتُرَدُّونَ إِلَىٰ عَـٰلِمِ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿١٠٥﴾

தூதரே!- போரை விட்டுப் பின்தங்கிய தமது தவறிலிருந்து மீண்ட இவர்களிடம் கூறுவீராக: “உங்களுக்குத் தவறிச் சென்றவற்றினால் ஏற்பட்ட இழப்புக்களை சீர் செய்துவிடுங்கள். உங்களின் செயல்களை அல்லாஹ்வுக்காக ஆக்கிக் கொள்ளுங்கள். அவனை திருப்திப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களும் உங்களின் செயல்களைக் கவனிப்பார்கள். மறுமை நாளில் எல்லாவற்றையும் அறிந்த உங்களின் இறைவனின் பக்கம் நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் இரகசியமாகச் செய்ததையும் வெளிப்படையாகச் செய்ததையும் அவன் அறிவான். நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த செயல்களைக் குறித்து அவன் உங்களுக்கு அறிவிப்பான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.