×
التوبةவசனம் 106

அல்-முக்தஸர்

وَءَاخَرُونَ مُرْجَوْنَ لِأَمْرِ ٱللَّهِ إِمَّا يُعَذِّبُهُمْ وَإِمَّا يَتُوبُ عَلَيْهِمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿١٠٦﴾

எவ்வித காரணமும் இன்றி தபூக் போரை விட்டுப் பின்தங்கிய வேறு சிலரும் இருக்கிறார்கள். அவர்களின் விவகாரம் அல்லாஹ்வின் தீர்ப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தான் நாடியவாறு அவன் அவர்கள் விஷயத்தில் தீர்ப்பளிப்பான். அவர்கள் மன்னிப்புக் கோரவில்லையெனில் அவன் அவர்களைத் தண்டிக்கலாம். அவர்கள் மன்னிப்புக் கோரினால் அவன் அவர்களை மன்னிக்கலாம். தன் தண்டனைக்கும் மன்னிப்பிற்கும் தகுதியானவர்களை அவன் நன்கறிவான். தான் வழங்கும் சட்டங்களில், தன் நிர்வாகத்தில் அவன் ஞானம் மிக்கவன். அவர்கள் முராரா இப்னு ரபீஃ, கஅப் இப்னு மாலிக், ஹிலால் இப்னு உமைய்யா ஆகியோராவர்.