அல்-முக்தஸர்
إِنَّ ٱللَّهَ ٱشْتَرَىٰ مِنَ ٱلْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَٰلَهُم بِأَنَّ لَهُمُ ٱلْجَنَّةَ ۚ يُقَـٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ ۖ وَعْدًا عَلَيْهِ حَقًّا فِى ٱلتَّوْرَىٰةِ وَٱلْإِنجِيلِ وَٱلْقُرْءَانِ ۚ وَمَنْ أَوْفَىٰ بِعَهْدِهِۦ مِنَ ٱللَّهِ ۚ فَٱسْتَبْشِرُوا۟ بِبَيْعِكُمُ ٱلَّذِى بَايَعْتُم بِهِۦ ۚ وَذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ ﴿١١١﴾
நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்ட அடியார்களின் உயிர்களை -அவன்தான் அவற்றிற்கு உரிமையாளன் என்ற போதிலும்- மிக உயர்ந்த விலையான சுவனத்துக்குப் பகரமாக அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டான். அவர்கள் அவனுடைய வாக்கை மேலோங்கச் செய்வதற்காக நிராகரிப்பாளர்களுடன் போரிடுகிறார்கள். அதில் நிராகரிப்பாளர்களைக் கொல்கிறார்கள்; நிராகரிப்பாளர்களால் கொல்லப்படுகிறார்கள். அல்லாஹ் மூஸாவுக்கு அளித்த தவ்ராத்திலும் ஈஸாவுக்கு அளித்த இன்ஜீலிலும் முஹம்மதுக்கு அளித்த குர்ஆனிலும் இவ்வாறு உண்மையான வாக்குறுதியை வழங்கியுள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவர் யாருமில்லை. -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் அல்லாஹ்விடம் செய்து கொண்ட வியாபாரத்தைக் குறித்து மகிழ்ச்சியடையுங்கள். நீங்கள் மிகப் பெரும் இலாபத்தை சம்பாதித்துவிட்டீர்கள். இந்த வியாபாரம்தான் மகத்தான வெற்றியாகும்.