அல்-முக்தஸர்
ٱلتَّـٰٓئِبُونَ ٱلْعَـٰبِدُونَ ٱلْحَـٰمِدُونَ ٱلسَّـٰٓئِحُونَ ٱلرَّٰكِعُونَ ٱلسَّـٰجِدُونَ ٱلْـَٔامِرُونَ بِٱلْمَعْرُوفِ وَٱلنَّاهُونَ عَنِ ٱلْمُنكَرِ وَٱلْحَـٰفِظُونَ لِحُدُودِ ٱللَّهِ ۗ وَبَشِّرِ ٱلْمُؤْمِنِينَ ﴿١١٢﴾
இந்தக் கூலியைப் பெறக்கூடியவர்கள்தாம் அல்லாஹ் வெறுப்பவற்றிலிருந்து அவன் விரும்புபவற்றின் பக்கம் மீண்டவர்கள்; பணிவு இறை அச்சம் என்பவற்றின் காரணமாக உயர்ந்த பட்ச பணிவை வெளிப்படுத்தி அவனது வழிபாட்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியவர்கள்; எல்லா நிலைகளிலும் தங்கள் இறைவனைப் புகழக்கூடியவர்கள், நோன்பு நோற்கக்கூடியவர்கள்; தொழக்கூடியவர்கள்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் கட்டளையிட்டதைக் கொண்டு கட்டளையிடுபவர்கள்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவற்றை தடுப்பவர்கள்; பின்பற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் ஏவல்களைப் பேணக்கூடியவர்கள். தவிர்ந்து கொள்வதன் மூலம் அவனது விலக்கல்களைப் பேணக்கூடியவர்கள். -தூதரே!- இந்த பண்புகளைப் பெற்ற நம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் மகிழ்ச்சியளிப்பவற்றைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக.