அல்-முக்தஸர்
إِنَّ ٱللَّهَ لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ يُحْىِۦ وَيُمِيتُ ۚ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِىٍّ وَلَا نَصِيرٍ ﴿١١٦﴾
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவற்றில் அவனுக்கு எந்த பங்காளியும் இல்லை. அவையிரண்டிலும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. தான் வாழ்வளிக்க நாடியவர்களுக்கு அவன் வாழ்வளிக்கிறான்; தான் நாடியவர்களை மரணிக்கச் செய்கிறான். -மனிதர்களே!- உங்களின் விவகாரங்களுக்குப் பொறுப்பாளன், தீங்கிலிருந்து உங்களைக் காத்து உதவிபுரிபவன் உங்கள் எதிரிகளுக்கு எதிராக உங்களுக்கு உதவுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.