×
التوبةவசனம் 117

அல்-முக்தஸர்

لَّقَد تَّابَ ٱللَّهُ عَلَى ٱلنَّبِىِّ وَٱلْمُهَـٰجِرِينَ وَٱلْأَنصَارِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ فِى سَاعَةِ ٱلْعُسْرَةِ مِنۢ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِّنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ ۚ إِنَّهُۥ بِهِمْ رَءُوفٌ رَّحِيمٌ ﴿١١٧﴾

நயவஞ்சகர்களுக்கு தபூக் போரை விட்டுப் பின்தங்க அனுமதியளித்த தூதர் முஹம்மதை அல்லாஹ் மன்னித்து விட்டான். பின்தங்காத முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் அவன் மன்னித்துவிட்டான். அவர்கள் தூதரை விட்டுப் பின்தங்காமல் கடுமையான வெப்ப காலத்திலும், குறைந்த வசதியுடனும் எதிரிகள் பலமாக இருந்த போதும், அவர்களில் ஒரு பிரிவினர் போரை விட்டுவிட நாடிய பின்னரும் தபூக் போரில் அவரைப் பின்தொடர்ந்தார்கள். பின்னர் உறுதியாக நிலைத்து நிற்பதற்கும் போருக்குப் புறப்படுவதற்கும் அல்லாஹ் அவர்களுக்கு உதவி புரிந்தான். மேலும் அவன் அவர்களை மன்னித்து விட்டான். அவர்களின் விஷயத்தில் அவன் பரிவுடையவனாகவும் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கோரும் பாக்கியத்தை அளித்ததும் அதனை ஏற்றுக்கொண்டதும் அவனது அருளின் வெளிப்பாடாகும்.