×
التوبةவசனம் 12

அல்-முக்தஸர்

وَإِن نَّكَثُوٓا۟ أَيْمَـٰنَهُم مِّنۢ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا۟ فِى دِينِكُمْ فَقَـٰتِلُوٓا۟ أَئِمَّةَ ٱلْكُفْرِ ۙ إِنَّهُمْ لَآ أَيْمَـٰنَ لَهُمْ لَعَلَّهُمْ يَنتَهُونَ ﴿١٢﴾

நீங்கள் குறிப்பிட்ட காலம் வரை போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்ட இணைவைப்பாளர்கள் தங்களின் ஒப்பந்தத்தை மீறி, உங்களின் மார்க்கத்தைக் குறைகூறினால் நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள்தாம் நிராகரிப்பின் தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் அவர்களின் உயிர்களைப் பாதுகாக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. தங்களின் நிராகரிப்பிலிருந்தும் ஒப்பந்தங்களை மீறுவதிலிருந்தும் மார்க்கத்தைக் குறை கூறுவதிலிருந்தும் அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு அவர்களுடன் போரிடுங்கள்.