×
التوبةவசனம் 13

அல்-முக்தஸர்

أَلَا تُقَـٰتِلُونَ قَوْمًا نَّكَثُوٓا۟ أَيْمَـٰنَهُمْ وَهَمُّوا۟ بِإِخْرَاجِ ٱلرَّسُولِ وَهُم بَدَءُوكُمْ أَوَّلَ مَرَّةٍ ۚ أَتَخْشَوْنَهُمْ ۚ فَٱللَّهُ أَحَقُّ أَن تَخْشَوْهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿١٣﴾

நம்பிக்கையாளர்களே!- தங்களின் ஒப்பந்தங்களையும் வாக்குறுதிகளையும் மீறியோருடன் நீங்கள் ஏன் போரிடக் கூடாது? அவர்கள் ‘தாருன் நத்வா’ என்னும் சபையிலே ஒன்றுகூடி தூதரை மக்காவிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டார்கள். அவர்கள்தாம் தூதரின் அணியில் இருக்கின்ற குசாஆ குலத்தாருக்கு எதிராக குறைஷிகளின் அணியில் இருக்கின்ற பக்ர் குலத்தாருக்கு உதவி செய்து போரைத் தொடங்கினார்கள். நீங்கள் அவர்களுக்குப் பயந்து அவர்களுடன் போரிடவில்லையா? நீங்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வே நீங்கள் அஞ்சுவதற்குத் தகுதியானவன்.