அல்-முக்தஸர்
أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِى كُلِّ عَامٍ مَّرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ ﴿١٢٦﴾
ஆண்டிற்கு ஒரு முறையோ இரு முறையோ அல்லாஹ் அவர்களின் நிலமையை அம்பலப்படுத்தி நயவஞ்சகத்தனத்தை வெளிப்படுத்தி அவர்களை சோதனைக்குள்ளாக்குவதைக் கொண்டு அவர்கள் படிப்பினை பெறவில்லையா? அல்லாஹ்தான் இவ்வாறு செய்கிறான் என்பதை அவர்கள் அறிந்திருந்தும் அவர்களின் நிராகரிப்பிலிருந்து மீளாமலும் நயவஞ்சத்திலிருந்து விடுபடாமலும் உள்ளனர்! அவர்களுக்கு இறங்கிய சோதனையையும், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது என்பதையும் அவர்கள் நினைவில் வைத்திருப்பதும் இல்லை!