×
التوبةவசனம் 127

அல்-முக்தஸர்

وَإِذَا مَآ أُنزِلَتْ سُورَةٌ نَّظَرَ بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ هَلْ يَرَىٰكُم مِّنْ أَحَدٍ ثُمَّ ٱنصَرَفُوا۟ ۚ صَرَفَ ٱللَّهُ قُلُوبَهُم بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُونَ ﴿١٢٧﴾

நயவஞ்சகர்களைக் குறித்து கூறப்படும் ஏதேனும் ஒரு அத்தியாயத்தை அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கினால் நயவஞ்சகர்கள், “உங்களை யாராவது பார்க்கிறார்களா?” என்று கூறியவர்களாக அவர்களில் ஒருவரையொருவர் பார்க்கின்றனர். யாரும் அவர்களைப் பார்க்கவில்லையெனில் அவையை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்களின் உள்ளங்களை நேர்வழி மற்றும் நலவை விட்டும் திருப்பி விட்டான், அவர்களைக் கைவிட்டு விட்டான். ஏனெனில் அவர்கள் விளங்கிக் கொள்ளாத மக்களாக இருக்கிறார்கள்.