அல்-முக்தஸர்
وَيُذْهِبْ غَيْظَ قُلُوبِهِمْ ۗ وَيَتُوبُ ٱللَّهُ عَلَىٰ مَن يَشَآءُ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿١٥﴾
நம்பிக்கைகொண்ட தன் அடியார்களுக்கு வெற்றியை அளித்து அவர்களின் உள்ளங்களிலுள்ள கோபத்தை நீக்குவான். இந்த பிடிவாதக்காரர்கள் மக்கா வெற்றியின் போது சில மக்காவாசிகள் செய்தது போல் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரினால் தான் நாடியவர்களை அவன் மன்னிப்பான். உண்மையாகவே மன்னிப்புக் கோரக்கூடியவர்களை அவன் நன்கறிவான். தன் படைப்பில், தன் நிர்வாகத்தில், தான் வழங்கும் சட்டங்களில் அவன் ஞானம்மிக்கவனாக இருக்கின்றான்.