அல்-முக்தஸர்
أَمْ حَسِبْتُمْ أَن تُتْرَكُوا۟ وَلَمَّا يَعْلَمِ ٱللَّهُ ٱلَّذِينَ جَـٰهَدُوا۟ مِنكُمْ وَلَمْ يَتَّخِذُوا۟ مِن دُونِ ٱللَّهِ وَلَا رَسُولِهِۦ وَلَا ٱلْمُؤْمِنِينَ وَلِيجَةً ۚ وَٱللَّهُ خَبِيرٌۢ بِمَا تَعْمَلُونَ ﴿١٦﴾
நம்பிக்கையாளர்களே!- அல்லாஹ் உங்களை சோதிக்காமல் விட்டுவிடுவான் என்று எண்ணிக் கொண்டீர்களா? சோதிப்பது அவனுடைய நியதியாகும். உங்களில் உளத் தூய்மையுடன் ஜிஹாது செய்யக்கூடியவர்களையும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கையாளர்களையும் விடுத்து நிராகரிப்பாளர்களை நெருக்கமானவர்களாகவும் உற்ற நண்பர்களாகவும் ஆக்கிக்கொள்ளாதவர்களையும் அவன் வெளிப்படையாக அறியும் வரை நிச்சயம் உங்களை சோதிப்பான். நீங்கள் செய்யக் கூடியவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.