×
التوبةவசனம் 24

அல்-முக்தஸர்

قُلْ إِن كَانَ ءَابَآؤُكُمْ وَأَبْنَآؤُكُمْ وَإِخْوَٰنُكُمْ وَأَزْوَٰجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَٰلٌ ٱقْتَرَفْتُمُوهَا وَتِجَـٰرَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَـٰكِنُ تَرْضَوْنَهَآ أَحَبَّ إِلَيْكُم مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ وَجِهَادٍ فِى سَبِيلِهِۦ فَتَرَبَّصُوا۟ حَتَّىٰ يَأْتِىَ ٱللَّهُ بِأَمْرِهِۦ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَـٰسِقِينَ ﴿٢٤﴾

தூதரே! நீர் கூறுவீராக: -“நம்பிக்கையாளர்களே!- உங்களின் தந்தையரும் ஆண்மக்களும், சகோதரர்களும், மனைவியரும், உறவினரும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், நீங்கள் இலாபத்தை விரும்பி நஷ்டத்தை அஞ்சும் உங்களின் வியாபாரமும், நீங்கள் தங்கியிருக்க விரும்பும் உங்களின் வீடுகளும் அல்லாஹ்வை விடவும் அவனுடைய தூதரை விடவும் அவனுடைய பாதையில் ஜிஹாது செய்வதை விடவும் உங்களுக்குப் பிரியமானவையாக இருந்தால் அல்லாஹ் உங்கள் மீது இறக்கும் வேதனையை எதிர்பாருங்கள். தனக்குக் கட்டுப்பட மறுப்பவர்களுக்கு அல்லாஹ் அவனுக்குப் பொருத்தமான நற்செயல் செய்யும் வாய்ப்பினை வழங்க மாட்டான்.”