×
التوبةவசனம் 25

அல்-முக்தஸர்

لَقَدْ نَصَرَكُمُ ٱللَّهُ فِى مَوَاطِنَ كَثِيرَةٍ ۙ وَيَوْمَ حُنَيْنٍ ۙ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنكُمْ شَيْـًٔا وَضَاقَتْ عَلَيْكُمُ ٱلْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُم مُّدْبِرِينَ ﴿٢٥﴾

நம்பிக்கையாளர்களே!- நீங்கள் ஆள் பலம், ஆயுத பலம் ஆகியவற்றில் குறைவாக இருந்த போதும் நீங்கள் அல்லாஹ்வையே சார்ந்திருந்து வெளிப்படையான காரணிகளைக் கடைப்பிடித்து, உங்களது அதிக எண்ணிக்கையின் மூலம் பெருமை கொள்ளாதிருந்த போது உங்களின் எதிரிகளான இணைவைப்பாளர்களுக்கு எதிராக அல்லாஹ் உங்களுக்கு பல போர்களில் உதவி புரிந்துள்ளான். மாறாக அதிக எண்ணிக்கை வெற்றிக்குக் காரணமாக அமையவில்லை. ஆனால் ஹுனைன் போரில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களைக் கவர்ந்துவிட்டது. “நாம் அதிகமாக இருப்பதனால் இன்று நாம் தோல்வியுறமாட்டோம் என்று நீங்கள் கூறினீர்கள். ஆனாலும் உங்களைக் கவர்ந்த அதிக எண்ணிக்கை உங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. அதனால் உங்களின் எதிரிகள் உங்களை மிகைத்தார்கள். பூமி விசாலமாக இருந்த போதும் அது உங்களுக்கு நெருக்கடி மிகுந்ததாகத் தோன்றியது. பின்னர் நீங்கள் தோல்வியடைந்து எதிரிகளுக்கு புறங்காட்டி ஓடிவிட்டீர்கள்.