அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّمَا ٱلْمُشْرِكُونَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا۟ ٱلْمَسْجِدَ ٱلْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَـٰذَا ۚ وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ ٱللَّهُ مِن فَضْلِهِۦٓ إِن شَآءَ ۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٌ حَكِيمٌ ﴿٢٨﴾
அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களே! இணைவைப்பாளர்களிடம் நிராகரிப்பு, அநியாயம், தீய குணங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் காணப்படுவதால் அவர்கள் அசுத்தமானவர்களாவர். எனவே -மஸ்ஜிதுல் ஹராமை உள்ளடக்கிய- மக்காவின் புனித எல்லைக்குள் அவர்கள் ஹஜ் செய்யக்கூடியவர்களாக, உம்ரா செய்யக்கூடியவர்களாக இருந்தாலும் இந்த வருடமான ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டுக்குப் பிறகு நுழையக் கூடாது. -நம்பிக்கையாளர்களே!- அவர்கள் எடுத்து வந்துகொண்டிருந்த உணவுகள் பல்வேறு வியாபாரங்கள் தடைபடுவதால் நீங்கள் வறுமையை அஞ்சினால், நிச்சயமாக அல்லாஹ் நாடினால் தன் அருளை உங்களுக்கு வழங்கப் போதுமானவன். உங்களின் நிலைகளைப் பற்றி அல்லாஹ் நன்கறிந்தவன். உங்களுக்காக திட்டமிடக் கூடியவற்றில் அவன் ஞானம்மிக்கவன்.