அல்-முக்தஸர்
قَـٰتِلُوا۟ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱللَّهِ وَلَا بِٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَلَا يُحَرِّمُونَ مَا حَرَّمَ ٱللَّهُ وَرَسُولُهُۥ وَلَا يَدِينُونَ دِينَ ٱلْحَقِّ مِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ حَتَّىٰ يُعْطُوا۟ ٱلْجِزْيَةَ عَن يَدٍ وَهُمْ صَـٰغِرُونَ ﴿٢٩﴾
நம்பிக்கையாளர்களே!- யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களில் அல்லாஹ்வை இணையற்ற இறைவனாக ஏற்றுக் கொள்ளாத, மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாத, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடுத்தவைகளான இறந்தவை, பன்றி இறைச்சி, மதுபானம், வட்டி ஆகியவற்றைத் தவிர்ந்து கொள்ளாத, அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அடிபணியாத நிராகரிப்போருடன், அவர்கள் அடிபணிந்து தங்கள் கைகளால் ஜிஸ்யா வரி தரும் வரை போரிடுங்கள்.